search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்டி திவாரி"

    உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் திவாரியை கொலை செய்ததாக அவரது மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். #RohitShekharTiwari #TiwarisWife
    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கடந்த 16-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதும், அவர் மூச்சுத்திணறி இறந்திருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரோகித்தின் மனைவி அபூர்வா மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.



    இதற்கிடையே, ரோகித்தின் தாயார் உஜ்வாலா, காவல்துறையில் அளித்த தகவல் விசாரணையின் போக்கை மாற்றியது. தன் மருமகள் அபூர்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பணம்தான் குறிக்கோள் என்றும், ரோகித்தின் சொத்தை அபகரிக்க விரும்பியதாகவும் உஜ்வாலா குற்றம்சாட்டினார்.

    இதன் அடிப்படையில் விசாரணை நடத்தியபோது, ரோகித்தின் மனைவி மீது சந்தேகம் வலுத்தது. எனவே, அவரிடம் ஞாயிற்றுக்கிழமை போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது, அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் போலீசாரின் சந்தேகம் உறுதி செய்யப்பட்டது. எனவே, விசாரணையின் முடிவில் அபூர்வாவை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

    ரோகித்-அபூர்வா தம்பதியரின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை என்றும், இருவரும் அடிக்கடி சண்டை போட்டதாகவும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.  #RohitShekharTiwari #TiwarisWife

    உத்தரபிரதேசம், உத்ரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்-மந்திரியான என்.டி.திவாரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. #Congress #NTTiwari
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என்.டி.திவாரி.

    உத்தரபிரதேசம், உத்ரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்-மந்திரியான இவர், ஆந்திர மாநில கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். 92 வயதான என்.டி.திவாரி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.

    இதற்கு சிகிச்சை பெறுவதற்காக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வருடம் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.

    தற்போது என்.டி.திவாரியின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    உத்ரகாண்ட் மாநில முதல்-மந்திரி திரிவேந்திர ராவத் ஆஸ்பத்திரிக்கு சென்று திவாரி உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்.டி.திவாரியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவரது உடல் உறுப்புகளில் பல செயல் இழந்து விட்டன. அரசியலில் எனக்கு குரு போன்றவர். நமது பிரார்த்தனை மட்டுமே அவரை காப்பாற்ற முடியும்.

    இவ்வாறு திரிவேந்திர ராவத் தெரிவித்தார். #Congress #NTTiwari
    ×